பிக்பாஸ் ஜனனி
பிரபல தொலைக்காட்சியொன்றில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான்பிக்பாஸ்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துக் கொண்டனர். ஒருவரான இலங்கையைச் சேர்ந்த ஜனனியும் பங்குபற்றியிருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் இவர் 70 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து விட்டு குறைவான வாக்குகளால் வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் பல படவாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. மேலும், தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது.
புதிய வாய்ப்புக்கள்
இந்நிலையில் ஜனனி கோவிலில்மாலையும் கழுத்துமாக நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
இந்தப் புகைப்படத்தைக் குறித்து ஜனனி விளக்கம்கொடுக்கையில், தான் ஆல்பம் படப்பிடிப்பின் பூஜை எனவும் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் தன்னுடன் நடிப்பவர்கள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் எனவும் தெரிவித்திருந்தார்.