அடுத்த வருடம் முதல் அமுழுக்கு வரும் வகையில்..இலங்கை பாடசாலை மாணவிகளுக்கு மகிழ்ச்சி தகவல்..!

நேற்று 28.11.2023 பாராளுமன்றத்தில் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் உள்ள சுமார் 12 லட்சம் பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை வழங்க உள்ளதாகவும்,முதல் திட்டமாக முதலில் 3 லட்சம் பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை வழங்கி இந்த திட்டத்தை ஆரம்பிக்க‌ எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

மேலும் இது சமூகப்பொறுப்புணர்வுத் திட்டமாக செயல் படுத்தப்படவுள்ளது எனவும் மேலும் கிராமப்புற பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் நேற்றைய பாராளுமன்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *