23 September, 2023

அது எனக்கு ரொம்ப முக்கியம் அது இல்லன்னா ஒரு உறவே தேவையில்லை; – கொந்தளித்த நடிகை அஞ்சலி!

நடிகை அஞ்சலி

நடிகை அஞ்சலி(36) தமிழில் கற்றது தமிழ் என்ற படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் அவர் நடித்த அங்காடி தெரு படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. தொடர்ந்து, தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ளார்.

2011ல் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். அதனையடுத்து இருவருக்கு காதல் என பரவலாக கிசுகிசுக்கப்பட்டது. தற்போது வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ரொம்ப முக்கியம்

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ஒரு ரிலேஷன்ஷிப்பில் மரியாதை ரொம்ப முக்கியம். அதன்பிறகு தான் அன்பு, காதல் எல்லாமே. அப்படியொரு மரியாதை இல்லையென்றால் அந்த உறவே எனக்கு தேவையில்லை.

அதேபோல் கேரியரா அல்லது நல்ல உறவு இந்த இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய சொன்னால் எனக்கு இரண்டுமே முக்கியம் தான்.ருமணத்திற்குப் பிறகு ஆண்கள் வேலைக்கு செல்வது போல பெண்களாலும் செல்ல முடியும். சில நடிகைகள் திருமணமாகி குழந்தைகளை பெற்ற பிறகும் படங்களில் நடித்து வருகிறார்கள் எனப் பேசியுள்ளார்.

Share