30 May, 2023

அனைத்து அரச நிறுவனங்களுக்கும்,திணைக்களங்களுக்கும் வெளியான சுற்றறிக்கை

அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் நீர், மின்சாரம், எரிபொருள் மற்றும் தொலைபேசி ஆகியவற்றிற்காக பயன்படுத்தப்படும் மாதாந்திர அலகுகளின் எண்ணிக்கை அடங்கிய தகவல் அறிக்கையை கோருவதற்கு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான 06 மாத காலப்பகுதிக்கு மாதாந்தம் செலவிடப்பட்ட அலகுகளின் தரவுகளை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் நீர், மின்சாரம், எரிபொருள் மற்றும் தொலைபேசி பாவனை தொடர்பான தரவுகளை ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Share