30 May, 2023

அரசியல்வாதிகளால் நான் பல கோடி இழந்து விட்டேன்- ஓபனாக கூறிய கங்கனா

நடிகை கங்கனா

தமிழில் தாம் தாம் படத்தில் கதாநாயகியாக நடித்தன் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கங்கனா ரனாவத்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு கதையில் தலைவி என்ற படத்தில் கங்கனா நடித்தார், அப்படத்திற்கும் தமிழக மக்களிடம் நல்ல ரீச் கிடைத்தது.

சினிமாவை தாண்டி கங்கனா ரனாவத் அரசியல், சமூக கருத்துக்களை துணிச்சலாக வெளியிட்டு அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

மராட்டிய அரசும் கங்கனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. அவரது அலுவலகத்தையும் விதிமீறி கட்டியதாக இடித்தனர்.

நடிகையின் பேட்டி

நடிகை கங்கனா ஒரு பேட்டியில், அரசியல், சினிமா, சமூகப் பிரச்சனை எதுவாக இருந்தாலும் உடனே நான் கண்டனம் தெரிவிக்கிறேன், வெளிப்படையாக பேசுகிறேன்.

அரசியல் தலைவர்களை விமர்சனம் செய்ததாலும் நாட்டிற்கு எதிரான சக்திகளை எதிர்த்து குரல் கொடுத்ததாலும் சுமார் 30 விளம்பரங்களில் நடிக்க நான் ஒப்பந்தமாகி இருந்த நிலையிலும் இரவோடு இரவாக அவற்றை ரத்து செய்துவிட்டனர்.

இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு ரூ.30 முதல் ரூ.40 கோடி வருவாய் இழந்துவிட்டேன் என கூறியுள்ளார்.

Share