21 March, 2023

ஆண்டியாக இருந்தால் என்ன..? வயசு ஆகிறது என்பது இயற்கை வயது ஏறிக் கொண்டே போவதை எப்படி தப்பாக சொல்ல முடியும்.

தன்னை ஆன்ட்டி எனவும் குண்டு எனவும் கலாய்த்த சில ஆசாமிகளுக்கு சீரியல் நடிகை ஹரிப்ரியா கொடுத்துள்ள பதிலடி இணையத்தில் வைரலாகி வருகிறது. மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றான டிவி சீரியல்கள் திகழ்கின்றது.

சமீபகாலமாக வெள்ளித்திரைக்கு சென்று படங்களை பார்ப்பதை விடவும் சின்னத்திரையில் சீரியலை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. மேலும் சின்னத்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்காக தனியாக ரசிகர் பட்டாளமும் உருவாகி வருகின்றது.

இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹரிப்பிரியா. இவரை இசை என்று கூறினால் தான் பலருக்கும் தெரியும் பிரியமானவள் என்ற தொடரின் மூலம் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார்.

சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் சில வருடங்களிலேயே அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். கடந்த 2012ஆம் ஆண்டு சீரியல் நடிகர் விக்னேஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரம் விவாகரத்து செய்து விட்டனர். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவரை பார்த்த சில ஆசாமிகள் ஆண்ட்டி… குண்டு.. என்று இவரை கலாய்த்து கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.

இது குறித்து தனது பதிலை கூறியுள்ள ஹரிப்பிரியா.. ஆண்டியாக இருந்தால் என்ன..? வயசு ஆகிறது என்பது இயற்கை வயது ஏறிக் கொண்டே போவதை எப்படி தப்பாக சொல்ல முடியும். எல்லாருமே வயசு ஆகத்தான் செய்யும். எனக்கு காலில் அடிபட்டு இருக்கின்றது. அதனால் ஒர்க்கவுட் செய்ய முடியாமல் இருக்கிறேன். இங்கு ஒல்லியாக இருந்தால் தான் அழகு, வெள்ளையாக இருந்தால் தான் அழகு, கருப்பாக குண்டாக இருந்தால் அழகில்லை.. வயதாகிவிட்டால் அழகில்லை.. போன்ற கருத்துக்கள் விதைக்கப்பட்டுள்ளது.

எல்லாமே அழகுதான் என்று கூறியுள்ளார் ஹரிப்பிரியா. மேலும், தன்னை ஆண்ட்டி என்று அழைத்த ஆசாமியிடம்.. இளமையாகவே இருக்க வேண்டும் என்றால் உங்களுக்கு தெரிந்த டிப்ஸ் ஏதாவது கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

Share