தமிழ் சினிமாவிற்கு “இது என்ன மாயம்” என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் திரைப்படத்தில் பட்டைய கிளப்பினார்.
இந்த திரைப்படம் கீர்த்திக்கு கோலிவுட்டில் நல்ல மார்க்கட்டை உருவாக்கி கொடுத்தது.
மேலும் இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியது. தற்போது கீர்த்தி சுரேஷ் என்றால் தெரியாதவர்கள் என தென்னிந்தியாவில் யாரும் இருக்க மாட்டார்கள். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம் என பல மொழி நாயகியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், உதய நிதியுடன் சமிபத்தில் இசைவெளியீட்டு விழாவொன்றில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது கருப்பு சேலையில் குறைவான மேக்கப்பில் கலக்கலாக வருகை தந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் புகைப்படங்களை பார்க்கும் போது கீர்த்தி உடல் மெலிந்து இருப்பது போல் இருக்கும். ஆனால் சேலையில் பழைய கீர்த்தியை பார்ப்பது போல் இருக்கிறார்.
இந்த நிலையில் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள். “ கருப்பு சேலையில் கீர்த்தியின் அழகை கூற வார்த்தைகளே இல்லை.” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.