25 September, 2023

இசை நிகழ்ச்சிகள் தொடர்பில் இலங்கையில் வெளியான புதிய அறிவிப்பு!

இலங்கையில் இசை நிகழ்ச்சிகளை முடிப்பதற்கான கால வரம்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அடிப்படை உரிமைகள் வழக்கில் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின்படி கால வரம்பு மாற்றப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ Harin Fernando தெரிவித்துள்ளார்.

இசை நிகழ்ச்சிகளை முடிப்பதற்கான நேர வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளதாக டுவிட்டரில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இசை நிகழ்ச்சிகள் மருத்துவமனைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு இடையில் நியாயமான இடைவெளியை பேண வேண்டும் என்றும் அமைச்சர் ஹரின் மேலும் தெரிவித்துள்ளார்.

Share