29 May, 2023

இந்தியத் திரைப்பட நடிகர் சூரி இலங்கைக்கு விஜயம் !

இந்தியத் திரைப்பட நடிகரான சூரி வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானார்.

பின்னர் பிரபல முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயனுடம் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றார்.

இவ்வாறான நிலையில் தனது விடுமுறை நாட்களை கழிக்க நடிகர் சூரி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கையின் நுவரெலியா மாவட்டத்திற்கு சென்ற சூரி அங்கிருந்த அலைவரிசை ஒன்றிற்கு பிரத்தியேக பேட்டியை அளித்திருந்தார்.

அங்கு பேட்டி அளித்த சூரி, இங்கு அன்பு தம்பிகள், உறவினர்களை எல்லோரையும் பார்த்ததில் ரொம்ப சந்தேகமாக இருக்கிறது என கூறியுள்ளார்.

Share