30 May, 2023

இந்த பூனையும் பால் குடிக்குமா..? – காதலனுடன் நடிகை தமன்னா லா..ஆ…..ங் ட்ரைவ்..!

தமன்னா ( Tamanna Bhatia ) தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், மராத்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில், வியாபாரி படத்தில் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமான தமன்னா, பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் நடித்த கல்லூரி படம் வாயிலாக, ரசிகர்கள் மததியில் நல்ல அறிமுகத்தை பெற்றார். அதைத்தொடர்ந்து தமிழில் பல பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது.

பாகுபலி படத்தில் இவர் ஏற்று நடித்த கேரக்டர், நல்ல பெயரை பெற்றுத் தந்தது. கேஜிஎப், அயன், தோழா, சைரா, பையா, தேவி, சிறுத்தை வீரம், சுறா, வேங்கை, ஸ்கெட்ச், தர்மதுரை, பெட்ரோமாக்ஸ், தி்ல்லாலங்கடி, கேடி, கண்டேன் காதலை என பல படங்கள் இவரது நடிப்பாற்றலை சிறப்பாக வெளிப்படுத்தின.

இப்போது தமன்னா, தெலுங்கில் போலோ சங்கர் என்ற படத்தில் சிரஞ்சீவியுடன் நடிக்கிறார். இதில், சிரஞ்சீவியின் தங்கையாக, கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். தமிழில் அஜித்குமார் நடிப்பில் வந்த வேதாளம் படத்தின் கதைதான் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில், இப்போது நடித்து வரும் தமன்னா, அதன்பிறகு அரண்மனை 4 என்ற படத்தில் சுந்தர்சி படத்தில் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவுக்குள் தமன்னா வந்து, 18 ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு வயதும் 33 ஆகிறது. ஆனால், தமன்னா இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. திருமணம் குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்கும் தமன்னாவிடம் சரியான பதில் இல்லை.

இந்நிலையில், இந்தி நடிகர் விஜய் வர்மா என்பவருடன் தமன்னா, அதிக நெருக்கம் காட்டி வருகிறார். பல இடங்களுக்கு இருவரும் ஒன்றாகவே சென்று வருகின்றனர். சமீபத்தில் நடந்த பார்ட்டி ஒன்றில், இருவரும் முத்தமிட்டுக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. ஆனால், இருவரும் காதலிப்பதாக இன்னும் பொதுவெளியில் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால், இருவரது நெருக்கமான நட்பும், தொடர்கிறது.

இந்நிலையில், இரவு நேரத்தில் டின்னர் மற்றும் டேட்டிங் க்காக கார் ஒன்றில் தமன்னா ஏறிச் செல்கிறார். காரின் டிரைவர் இருக்கையில் இந்தி நடிகர் விஜய் வர்மா அமர்ந்துகொண்டு, காரை ஓட்டிச் செல்கிறார். அருகில் அமர்ந்திருக்கும் தமன்னா, முகம் முழுக்க சந்தோஷமாக காரில் அமர்ந்து செல்லும் இந்த வீடியோ வெளியாகி, இப்போது வைரலாகி வருகிறது,

தமிழ் சினிமாவில் நடித்த வரை, எந்த கிசுகிசு வுக்கும் தமன்னா ஆளாகவில்லை. அவர் சிறந்த நடிகை என்ற பெயர் மட்டுமே இருந்தது. இப்போது, இந்தி பட உலகுக்கு சென்ற பிறகு, தமன்னாவும் அங்குள்ள பாலிவுட் நடிகைகளை போலவே மாறிவிட்டார். அதன் வெளிப்பாடாக இப்படி, ஆண் நண்பருடன் டேட்டிங் செல்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆக நல்ல நடிப்பை வெளிப்படுத்திய தமன்னா, இப்படி இந்தி நடிகருடன் ஊர் சுற்றுவதை அறிந்த ரசிகர்கள், தமன்னாவா இப்படி? என ஆச்சரியமடைந்துள்ளனர்.

காதலர் என்று உறுதிப்படுத்தாத நிலையில், இப்படி தமன்னாவின் வாழ்க்கை முறை மாறி இருப்பது, பாலிவுட் நடிகைகளையும் எல்லாம் தமன்னா, மிஞ்சி விடுவார் போல் இருக்கிறதே, என ரசிகர்கள் பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Share