25 September, 2023

இரண்டாவது திருமண நாளை கணவர் சாக்ரடிஸுடன் கொண்டாடியதனது நடிகை கயல் ஆனந்தி

கயல் ஆனந்தி

தமிழ் சினிமாவில் 2014ம் ஆண்டு வெளியான பொறியாளன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கயல் ஆனந்தி.

அப்பட வெற்றியை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான கயல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க அட்டகாசமாக நடித்து மக்களின் பாராட்டுக்களை பெற்றார்.

அதன்பின் விசாரணை, பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் நடிக்க அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து தமிழ்-தெலுங்கு என பிஸியாக நடித்துவந்த கயல் ஆனந்தி நடிப்பில் இராவணக் கூட்டம் என்ற படம் வெளியாக இருக்கிறது.

திருமண கொண்டாட்டம்

ஆனந்தி துணை இயக்குனர் சாக்ரடீஸ் என்பவரை 2021ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.

தற்போது தனது இரண்டாவது திருமண நாளை கணவர் சாக்ரடிஸுடன் கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்களும் அவர்களின் திருமண நாளுக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

Share