23 September, 2023

இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் நாட்டைவிட்டு வெளியேற்றம்

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக 200,000க்கும் அதிகமான இலங்கையர்கள் நாட்டை விட்டு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட 200,026 பேர் நேற்று(03) வரை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளியேறியுள்ளதாக தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் மொத்தம் 311,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.