பிரமிட் திட்டங்களில் பங்குபற்றுவது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த விடயத்தினை தெரியப்படுத்தியுள்ளது.
வங்கித் தொழில் சட்டத்திற்கு முரணான விதத்தில், தடை செய்யப்பட்ட திட்டங்களை சில நிறுவனங்கள் நடத்துவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முறைப்பாட்டிற்கமைய தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை மேற்கொள்ளும் முக்கியமான 8 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இது தொடர்பிலான உண்மைத்தன்மையை கண்டறிவதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.
எச்சரிக்கை
குறித்த விடயங்கள் கண்டறியப்பட்டால் 3 வருட சிறைத்தண்டனை அல்லது ஒரு மில்லியன் ரூபாய் வரை தண்டப்பணம் செலுத்த வேண்டி ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே குறித்த தடை செய்யப்பட்ட திட்டங்களில் இருந்து விலகியும், அவதானமாகவும் இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.