25 September, 2023

இலங்கையானது பங்களாதேஷிடம் பெற்ற கடன் மீள செலுத்தப்படும் காலம்!

நாடு எதிர்நோக்கிய கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பங்களாதேஷிடம் 200 மில்லியன் டொலர் கடன் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் இந்தக் கடன் தொகை பெற்றுக்கொள்ளப்பட்டது.

மத்திய வங்கி ஆளுனரின் அறிவிப்பு

எனினும், நிதி நெருக்கடி நிலைமையினால் கடன் தொகை மீளச் செலுத்துவதற்கு காலம் தாழ்த்தப்பட்டது.

இந்த நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் 200 மில்லியன் டொலர்  கடன் தொகை மீளச் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நலந்தலால் வீரசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

Share