30 May, 2023

இலங்கையிலிருந்து டொலர்களை சம்பாதிப்போருக்கு சாதகமாக பத்திரம் சமர்ப்பிப்பு

வெளிநாட்டை தளமாகக் கொண்ட வாடிக்கையாளர்களுடனான வணிகங்கள் மூலம் டொலர்களை கொடுப்பனவாக பெறும் இலங்கையையர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிகளை வழங்குமாறு கோரி புதிய அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார விடுத்துள்ளார்.

மேலதிக விபரங்களுக்கான தொடர்பு

“வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடனான நேரடி ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையிலிருந்து சேவைகளை ஏற்றுமதி செய்யும் தனிநபர்களை சேர்த்துக்கொள்ளவும் மற்றும் மின்சார கார் அனுமதிக்கு தகுதி பெறுவதற்கு டொலர்களில் பணம் பெறவும் கோரும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வாகன அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுடையவர்கள் [email protected] என்ற மின்னஞ்சலைத் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

Share