25 September, 2023

இளந்தம்பதியினர் துப்பாக்கியினால் சுட்டு உயிர்மாய்ப்பு!!! நுவரெலியாவில் சம்பவம்

நுவரெலியாவில் குடும்பத் தகராறு காரணமாக கணவரொருவர், மனைவியைச் சுட்டுக் கொன்றதுடன் அவரும் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் டோப்பாஸ் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (07.08.2023) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை கணவர் பயன்படுத்தியுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நுவரெலியா, டோப்பாஸை வசிப்பிடமாகக் கொண்ட 28 மற்றும் 26 வயதுடைய தம்பதியினரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share