30 May, 2023

இளவரசி ஆகவேண்டும் என ஆசைப்பட்டீர்களா? மாணவியின் கேள்விக்கு இளவரசி கேட் அளித்த பதில்

நிகழ்ச்சி ஒன்றில் பள்ளி மாணவிகளை சந்தித்த இளவரசி கேட்டிடம், இளவரசி ஆகவேண்டும் என ஆசைப்பட்டீர்களா என கேட்டாள் ஒரு சிறுமி.

இளவரசியின் பதில்

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரித்தானிய இளவரசர் வில்லியமுடைய மனைவியான இளவரசி கேட்டிடம் மாணவிகள் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர்.

ஒரு மாணவி, கேட்டிடம் ராஜ குடும்பத்தில் வாழ்வதைக் குறித்து கேள்வி ஒன்றைக் கேட்க, அவளுக்கு பதிலளித்த கேட், தான் இளவரசியாக வாழ்வதற்கு பல விடயங்களைக் கற்றுக்கொள்ளவேண்டியிருந்தது என்றார்.

இளவரசி ஆகவேண்டும் என ஆசைப்பட்டீர்களா?

மற்றொரு மாணவி, நீங்கள் இளவரசி ஆகவேண்டும் என ஆசைப்பட்டீர்களா என்று கேட்டாள்.

அதற்கு பதிலளித்த கேட், தான் இளவரசி ஆவேன் என எதிர்பார்க்கவில்லை என்றும், இளவரசர் வில்லியம் மீது காதல் வந்ததால் தான் இளவரசி ஆனதாகவும் தெரிவித்தார்.

Share