வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் கணவன் மனைவியை எரித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குடும்பத் தகராறு காரணமாக, கணவர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகவும், பின்னர் மனைவியைக் கட்டிப்பிடித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த மனைவியும் கணவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த மனைவி நேற்று உயிரிழந்துள்ளார்.
கடந்த 24ஆம் திகதி போர்டிலா பாடசாலைக்கு அருகில் இருவருக்குமிடையில் இந்த தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் 44 வயதுடைய பெண் எனவும், சிகிச்சை பெற்று வந்த 54 வயதுடைய கணவர் வெல்லம்பிட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.