25 September, 2023

உயிரையும் பணயம் வைத்து ஸ்டண்ட் செய்த விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்க லலித் குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 68. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார்.

விஜய்யின் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளிவந்த திரைப்படம் ஜில்லா.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மோகன்லால், காஜல் அகர்வால், சம்பத், தம்பி ராமையா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். நேசன் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்நிலையில், இப்படத்தில் வரும் சண்டை காட்சி ஒன்றில் நடிகர் விஜய் தனது உயிரையும் பணயம் வைத்து செய்த ஸ்டண்ட் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.