உலகக்கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அஜர்பைஜானில் நடந்த உலகக்கோப்பை செஸ் போட்டியில் போராடி தமிழக வீரர் பிரக்ஞானந்தா 67 இலட்சம் பரிசு, வெள்ளிப்பதக்கத்தினை பெற்றிருந்தார்.
இந்நிலையில், வெள்ளிப்பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி உட்பட பலரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதன்போது இந்தியா பிரக்ஞானந்தாவினால் பெருமைபடுகின்றது என இந்திய பிரதமர் நரேந்திரமோடி பாராட்டியுள்ளதுடன், உங்கள் சாதனை 140 கோடி இந்தியர்களின் கனவை பிரதிபலிப்பதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளனர்.
மேலும், இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா தனது பதிவில், ‘ஒட்டுமொத்த நாட்டிற்கும் நீங்கள் பெருமை சேர்த்திருக்கிறீர்கள் பிரக்ஞானந்தா! உங்களின் கதை மிகவும் ஊக்கமளிக்கிறது. உங்களுக்காக அனைத்தையும் வைத்துக் கொண்டு எதிர்காலம் காத்திருப்பதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்’ எனவும் தெரிவித்துள்ளார்.