30 May, 2023

எனக்கு டைவர்ஸ் தராமல் வேறு பொண்ணுடன் அப்படி இருக்காரு..” – நடிகர் சரவணன் மீது மனைவி பகீர் புகார்..!

நடிகர் சரவணன்,(Saravanan) கடந்த 1990களில், தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்தவர். பொண்டாட்டி ராஜ்ஜியம், சூரியன் சந்திரன், பருத்தி வீரன், எனக்கு இன்னொரு பேரு இருக்கு, சவுக்கார்பேட்டை, ஆனந்தம் விளையாடும் வீடு, கோலமாவு கோகிலா, அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இதில், அமீர் இயக்கத்தில், கார்த்திக்கு சித்தப்பு ஆக நடித்த பருத்தி வீரன் படத்தில் சரவணனின் கேரக்டர், ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது. கருப்பு நிறத்தில் இருந்துகொண்டு, ஹீரோவாக நடித்து வெற்றி பெற்ற நடிகர்களில் சரவணனும் ஒருவர்.

இவர், விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், 2019ம் ஆண்டில் இடம்பெற்றார். இதில், யாரும் எதிர்பார்க்காத நிலையில், சரவணன் அந்த வீட்டை விட்டு அதிரடியாக வெளியேற்றப்பட்டார். நான் இளம் வயதில், பஸ்சில் பயணிக்கும்போது, பெண்களை அருகில் நின்று உரசுவதற்காகவே, பஸ்சில் செல்வேன் என, பிக்பாஸ் வீட்டுக்குள் தன்னை பற்றி வெளிப்படையாக கூறினார்.

இது, அவரை பற்றி தரக்குறைவான பார்வையை, ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. மேலும், பெண் பார்வையாளர்களையும், இவரது இந்த பேச்சு முகம் சுளிக்க வைத்தது. இதையடுத்து, சரவணன் அதிரடியாக அந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டார்.

இப்போதும் சில படங்களில் சரவணன் நடித்து வருகிறார், குறிப்பாக, நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தில், சரவணன் நடித்துவருகிறார். இந்நிலையில், சரவணனின் மனைவி சூர்யாஸ்ரீ என்பவர், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவில், நடிகர் சரவணன் மீது புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார்.

அதில், பருத்தி வீரன் படத்தில் நடிக்கும் வரை, எனது வருமானத்தில்தான், குடும்பம் நடந்தது. என் சம்பாத்தியத்தில்தான், எனது கணவர் வாழ்ந்து வந்தார்.

நான்தான் அவரை கவனித்து பராமரித்தேன். எனது வருமானத்தில் வாங்கிய நகைகளை விற்று, முகலிவாக்கத்தில் அபார்ட்மெண்ட் வீடு வாங்கினோம். என் கணவர் மீதுள்ள அன்பால், அவரது பெயரில் அந்த வீட்டை வாங்கினேன்.

ஆனால், இப்போது என்னை அந்த வீட்டை விட்டு அவர் வெளியே போகச் சொல்கிறார். வேறொரு பெண்ணுடன், குடும்பம் நடத்திக்கொண்டு என்னை, வீட்டை விட்டு விரட்டுகிறார். என் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை, என்று புகாரில் தெரிவித்துள்ளார்

இதற்கு முன்பு, தமிழக தொழில் துறை அமைச்சர் தாமோ அன்பரசனை சந்தித்த நடிகர் சரவணன், சென்னை முகலிவாக்கத்தில், தனது அடுக்குமாடி குடியிருப்பில் வீடு இருப்பதாகவும், அங்குள்ள தனது கார் பார்க்கிங் பகுதியை சிலர் ஆக்கிரமிப்பு செய்துகொண்டு பிரச்னை செய்வதாகவும் புகாரில் கூறி இருந்தார்.

நடிகர் சரவணன், சூர்யா ஸ்ரீயை காதலித்து திருமணம் செய்த நிலையில், பட வாய்ப்புகளின்றி இருந்த அவரை, பருத்தி வீரன் படத்தில் நடிக்கும் வரை கவனித்துக்கொண்டதாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்பு, தனக்கு விவாகரத்து தராமல் வேறொரு பெண்ணுடன் சரவணன் வாழ்வதாகவும், முகிலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் அவருக்கு எந்த பங்கும் இல்லை என்றும், தனக்கு எது நடந்தாலும், அந்த ஆபத்துக்கு காரணம் சரவணன்தான் என்றும் புகாரில், அவர் கூறியிருப்பது, சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகி வருகிறது.

Share