31 March, 2023

எனது இறுதிசடங்கில் வாய் நாற்றமடிக்காமல் சுவிங்கம்,சிக்கன், சீஸ் மக்ரூனி என வித விதமான உணவுகள் வேண்டும்..!

tamil cinema : பெண் ஒருவர் தன் இறுதி சடங்கு எப்படி நடக்க வேண்டும் என 10 விதிமுறைகளை சொல்லி வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த விதிமுறைகளை பார்த்த பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அவையாவன,

  1. இறுதி சடங்கில் கலந்து கொள்பவர்கள் அவருடன் எடுத்த புகைப்படத்தை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டுமாம்.
  2. அவரை கல்லறையில் புதைக்கும் முன்பு அவருக்கு அழகாக மேக்கப், லிப்ஸ்டிக், மஸ்காரா போட்டு அவரை அழகு படுத்த வேண்டுமாம்.
  3. அவர் புதைக்கப்பட்ட பின்பு அவரது கல்லறை மீது படுத்து யாரும் அழ கூடாதாம்.
  4. இறுதி சடங்கில் கலந்து கொள்பவர்கள் தங்கள் வாய் நாற்றமடிக்காமல் இருக்கு சுவங்கம் மெல்ல வேண்டுமாம்.
  5. இவரது இறுதி சடங்கில் இவர் குறித்து யார் பேசினாலும் 5 நிமிடங்களுக்கு மேல் பேசக்கூடாதாம்.
  6. இறுதி சடங்கில் கடந்து கொள்ளபவர்கள் யாரும் கருப்பு நிற ஆடை அணிந்து வரக்கூடாதாம்.
  7. கலர்புல் ஆடையுடன் தான் வரவேண்டுமாம்.
  8. இறுதி சடங்கில் பங்கேற்பவர்களுக்கு சிக்கன், சீஸ் மக்ரூனி என வித விதமான உணவுகள் வழங்கப்பட வேண்டுமாம்.
  9. இறுதி சடங்கின் போது பார் செட்டப் அமைக்கப்பட்ட வந்திருப்பவர்கள் அனைவரும் குறைந்தது 2 லார்ஜ் அடிக்க வேண்டுமாம். குறைவாக குடிப்பவர்கள் உடனடியாக வீட்டிற்கு கிளம்பலாம்.
  10. இறுதி சடங்கில் கலந்து கொள்பவர்கள் அதிகபட்சம் 20 நிமிடங்கள் தான் அழ வேண்டுமாம்.

இதனை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.