25 September, 2023

ஐஸ்வர்யா, உமாபதி காதல் ஆரம்பித்தது எப்போது தெரியுமா?

நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் காதல் ஆரம்பமானது எப்படி என்ற தகவலை தம்பி ராமையா கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா உமாபதி காதல்

தமிழ் சினிமா பிரபலங்கள் அதிகமான ஜோடி காதல் சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போதுஅர்ஜுன் மகள் ஐஸ்வர்யாமற்றும் தம்பி ராமையாவின் மகன் காதலித்து வருகின்றனர்.

தமிழில் சில படங்களில் நடித்துள்ள உமாபாதி ராஜாக்கிளி என்ற படத்தில் இயக்குனராகவும் காணப்படுகின்றார். இப்படத்திற்கு தம்பி ராமையா கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள நிலையில், சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது

இதே போன்று அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா சில படங்களில் நடித்துள்ள நிலையில், கடந்த 2018ம் ஆண்டு வெளியான சொல்லிவிடவா என்ற படத்துடன் சினிமாவை விட்டு விலகினார்.

ஒன்றாக சேர்ந்து நடிக்காமல் எப்படி இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது என்ற கேள்வி ரசிகர்களிடையே அதிகமாக எழுந்தது. இதற்கு உமாபதியின் தந்தை தம்பி ராமையா பதில் கொடுத்துள்ளார்.

அதாவது கடந்த 2021ம் ஆண்டில் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் உமாபதி போட்டியாளராக இருந்தார். இதன் மூலம் உமாபதிக்கும் ஐஸ்வர்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

நடிகர் அர்ஜுன் சென்னையில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்றை கடந்த ஆண்டு கட்டிய நிலையில், அங்கு தான் இந்த இரண்டு குடும்பம் சந்தித்து திருமணம் செய்ய முடிவு செய்தார்களாம்.

இவர்களின் திருமணத்தை குறித்த தேதி வரும் நவம்பர் மாதம் 8ம் தேதி உமாபதியின் பிறந்தநாளன்று வெளியிடுவதாகவும் கூறியுள்ளார்.

Share