நடிகை அசின்
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை ஆண்ட நாயகிகளில் ஒருவராக இருந்தவர் தான் அசின். மோகன் ராஜா இயக்கிய எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார்.
பின் விஜய்யுடன் சிவகாசி, சூர்யாவுடன் கஜினி, விக்ரமுடன் மஜா, உள்ளம் கேட்குமே என ஒரே ஆண்டில் தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்தார். போக்கிரி, வேல், தசாவதாரம் என தொடர்ந்து நடித்துவந்த அசின் அப்படியே பாலிவுட் பக்கமும் சென்றார்.
திருமணம், விவாகரத்து
2016ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராகுல் சர்மா என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமா பக்கம் வராமல் இருந்தார்.
இவர்களுக்கு 2017ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது, அரின் என பெயரும் வைத்தனர்.
தற்போது அசினின் கணவர் ராகுலுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் நடிகை எச்சரித்தும் அவர் கேட்காததால் கோபத்தில் அசின் அவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தனது மகளுடன் அசின் பெற்றோர் வீட்டில் தனியாக வசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.