தமிழ் சினிமாவில் 96 என்ற ஒரே திரைப்படத்தின் மூலம் தமிழக இளசுகள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கௌரி கிஷன்.
தற்பொழுது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. தன்னுடைய குட்டியான இடுப்பழகு எடுப்பாக தெரியும் படி கவர்ச்சியான உடையணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.
தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வரும் கௌரி கிஷன் சினிமா மட்டும் இல்லாமல் வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகின்றார்.
மேலும் ஆல்பம் பாடல்களிலும் தோன்றுகின்றார். தமிழில் வெளியான 96 மட்டுமில்லாமல் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு என்ற திரைப்படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கிலும் தனக்கான ரசிகர் வட்டத்தை பெற்றார் கௌரி கிஷன்.
இந்த படத்தில் நடிக்கும்போது கௌரி கிஷன் 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அப்போது நடைபெற்ற 96 படத்திற்கான ஆடிஷன் குறித்து துபாயில் உள்ள இவரது மாமா கூறியதன் பேரில் இந்த ஆடிஷனில் கலந்துகொண்டார்.
அதன்பிறகு அவருடைய சினிமா வாழ்க்கையில் ஏறுமுகமாகவே உள்ளது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் தேவை என்றால் கவர்ச்சியாக நடிப்பதில் எனக்கு தயக்கம் இல்லை என்கிறார் கௌரி கிஷன்.