25 September, 2023

கனடாவில் தமிழ் கடையில் மாம்பழங்களை வாங்கிய ஈழத்தமிழருக்கு ஏற்பட்ட நிலை

கனடாவில் ஸ்காபுரோவில் உள்ள தமிழ் கடை ஒன்றில் மாம்பழங்களை வாங்கிய ஈழத்தமிழர் ஒருவர் தான் ஏமாற்றப்பட்ட விதத்தையும் அதனால் ஏற்பட்ட வலியையும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

14 டொலருக்கு 9 மாம்பழங்களை வாங்கிய நிலையில் மாம்பழங்கள் அனைத்தும் பழுதடைந்திருந்தது. அதனை கொண்டு உரிய கடைக்கு சென்றேன்.

முதலாளியினை நட்புடன் அணுகி ஓரமாக கூட்டிச்சென்று பழுதடைந்த பழங்களைக்காட்டி அண்ணா இதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் என கூறி காண்பித்தேன். அதற்கு நீங்களும் இதை பார்த்து அல்லவா எடுத்திருக்க வேண்டும் என கூறியபோது, அது உண்மைதான்.

நீங்களும் இதை பார்த்து அல்லவா விற்கவேண்டும் என்றேன். அதற்கு சற்று தடுமாற்றத்துடன் ம்ம்ம். வேறொன்றை எடுத்து செல்லுங்கள் அல்லது பணத்தைப் பெற்றுச் செல்லுங்கள் என்று கூறியவாறே உதாசீனமாக உள்ளே சென்றுவிட்டார்.

முன் கடை விற்பனையில் பெண்மணி ஒருவர் விறுவிறுப்பாக ஈடுபட்டுக்கொண்டு நின்றார். தரையில் கொட்டுண்டு புரண்டு ஓடிய சில மங்குஸ்தான் பழங்களையும் கூச்சமின்றி மக்கள் பார்க்கிறார்களே என்ற சலனம் ஏதுமின்றி எடுத்து பெட்டியில் அடுக்கி வைத்தார்.

அந்த இடம் ஒரு நடைபாதை. அவரை அணுகி பழுதடைந்த மாம்பழப் பெட்டியை மாற்ற கேட்டபோது. அந்த பெண்மணி பாராமுகமாக போனில் கதைத்துக்கொண்டும் மற்றய கஸ்ட்மர்க்ளுக்கு விற்பனை செய்வதிலுமே கவனமாக இருந்தார்.

Share