25 September, 2023

கல்யாணமாகி ஒரு வருஷமாகியும் தாம்பத்யம் இல்லை – கணவர் மீது மனைவி பகீர் புகார்!

கர்நாடகா,ஹசன் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர், மாண்டியாவைச் சேர்ந்த 21 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் திருமணமாகி ஓராண்டு ஆகியுள்ளது. இந்நிலையில், அந்தப் பெண் கணவர் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தன் திருமணம் முடிந்து ஓராண்டான போதும், கணவர் தன்னுடன் உடலுறவு வைத்துக்கொள்வதில்லை. தனக்கு அவர் விவாகரத்து அளிக்கவும் மறுக்கிறார். திருமணத்திற்கு முன்பு இரு வீட்டாருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாது. இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.

 மனைவி புகார்

தான் இந்த திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இல்லை. அவர் அடிக்கடி கோவப்படுகிறார். தான் நெருங்கி சென்று அன்பாக பேசினால் கூட அவர் சரியாக பேசுவதில்லை. என்னுடைய வாழ்க்கையை அவர் சீரழித்து விட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உத்தர பிரதேசத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றம், வாழ்க்கை துணையுடன் நீண்ட காலம் உடலுறவை மறுப்பது, அவர்களை மனரீதியாக துன்புறுத்துவதற்கு சமம் என்று வழக்கு ஒன்றில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share