23 September, 2023

குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய பின் ஆண்ட்ரியன் வெளியிட்ட முதல் பதிவு..

ஆண்ட்ரியன் எலிமினேஷன்

குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கடந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் சுற்றில் சற்றும் எதிர்பார்க்காத விதமாக ஆண்ட்ரியன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்

இதன்மூலம், சிவாங்கியுடன் இணைந்து விசித்திரா, கிரண், மைம் கோபி மற்றும் ஸ்ருஷ்டி டாப் 5ல் இணைந்தனர். ஆண்ட்ரியன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

வெளியிட்ட முதல் பதிவு

இந்நிலையில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஆண்ட்ரியன் தன்னுடைய முதல் பதிவை வெளியிட்டுள்ளார்.

இதில், என்னுடைய எலிமினேஷனுக்கு வேறு யாரும் காரணமில்லை. இது என்னயுடைய நாள் கிடையாது. அதனால் தான் நான் எலிமினேஷன் ஆகிவிட்டேன். எனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு மிக்க நன்றி, கண்டிப்பாக வைல்டு கார்டு சுற்றில் கம் பேக் கொடுப்பேன் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவை வெளியிட்டுள்ளார்.

Share