25 September, 2023

குக் வித் கோமாளி செட்டில் இருந்து ஷிவாங்கி போட்ட எமோஷ்னல் போஸ்ட்

ஷிவாங்கி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தனது பாடல் திறமையை வெளிக்காட்ட அறிமுகமானவர் தான் ஷிவாங்கி. பாடல்கள் நன்றாக பாடினாலும் அவரால் டைட்டில் ஜெயிக்க முடியவில்லை.

ஆனால் இப்போது பாடுவதில் நன்றாக டியூன் ஆகிவிட்டார் என்றே கூறலாம். நிறைய இசைக் கச்சேரிகள் பாடி வரும் ஷிவாங்கி இடையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று வந்தார்.

கோமாளியாக 3 சீசன்கள் இருந்த அவர் 4வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி கலக்கினார்.

கடைசி போட்டோ

ஷிவாங்கி இந்த 4வது சீசனோடு இனி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போவதில்லை என்று கூறியிருந்தார்.

இது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது, ஆனால் இப்போது இன்னும் வருத்தமடையும் அளவிற்கு ஒரு போட்டோ போட்டுள்ளார்.

அதில் குக் வித் கோமாளி 4வது சீசன் செட்டில் கடைசியாக எடுத்த புகைப்படத்தை போட்டு எமோஷ்னலாக 4 வருட பயணம் என பதிவிட்டுள்ளார்.

Share