ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சளார் படத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் அந்த படம் வரும் செப்டம்பர் 28ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
ஸ்ருதி ஹாசன் எப்போதும் வெளிப்படையாக பல விஷயங்களை பேசுபவர். அவரது பர்சனல் விஷயங்களை கூட ஓப்பனாக பேசுவார்.
குடிப்பழக்கம் இருக்கா?
இந்நிலையில் ஸ்ருதி ஹசனுக்கு கஞ்சா குடிக்கும் பழக்கம் இருக்கா என நெட்டிசன் ஒருவர் இன்ஸ்டாவில் கேட்டிருக்கிறார்.
அதற்கு பதில் அளித்த அவர். “எனக்கு அந்த பழக்கம் இல்லை. குடிக்கவும் மாட்டேன். குடி இல்லாத ஒரு வாழ்க்கையை தற்போது வாழ்ந்து வருகிறேன்” என ஸ்ருதி ஹாசன் தெரிவித்து இருக்கிறார்.