சட்டீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள அம்ளிஸ்வர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் சோன்வான்(40). இவரின் மனைவி சங்கீதா(30). மனைவி
சங்கீதாவின் கருப்பு நிறத்தை வைத்து அவரது கணவர் கேலி செய்து வருவதும், இதனால் இருவ ருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த நாட்களுக்கு முன்பு ஆனந்த் சோன்வானி அவரது மனைவி சங்கீதாவின் கருப்பு நிறத்தை விடாமல் கேலி செய்து வந்துள்ளார்.
இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற மனைவி வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து கணவன் ஆனந்தை வெட்டி கொலை செய்துள்ளார்.
இதுமட்டுமின்றி கூர்மையான ஆயுதத்தை கொண்டு அவரது மனைவி வெட்டி எடுத்துள்ளார்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்து காவல்துறையினர்கள் கைது விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.