29 May, 2023

சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை தற்போது பல விதமான தொழில்களில் முதலீடு செய்து வருகிறார் நயன்!

நயன்தாரா

நடிகை நயன்தாரா சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை தற்போது பல விதமான தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். அவர் ஏற்கனவே ஒரு டீ பிராண்ட்டில் முதலீடு செய்து இருக்கிறார்.

இந்நிலையில் சென்னையில் இருக்கும் அகஸ்தியா தியேட்டரை நயன்தாரா வாங்கிவிட்டதாகவும், அதை இடித்துவிட்டு விரைவில் ஒரு பெரிய மல்டிபிளெக்ஸ் கட்ட இருக்கிறார் என்றும் செய்தி வெளியானது.

உண்மையா?

இந்நிலையில் அந்த செய்தி உண்மை இல்லை என தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த தியேட்டரை தனி நபர் விற்க முடியாது, அது டிரஸ்ட் ஒன்றிற்கு சொந்தமானது என்றும் கூறப்படுகிறது.

இடிக்கப்பட்ட அந்த தியேட்டர் இருக்கும் இடத்தில் கண் மருத்துவமனை கட்ட போகிறார்கள் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Share