25 September, 2023

சீரற்ற காலநிலையால் அல்லல்படும் மலையக மக்கள்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேக்கிலி தோட்டப்பகுதியில் இன்று புதன்கிழமை (05) காலை மண்மேட்டுடன் கூடிய கொங்கிறீட் கட்டிடம் வீட்டின் மீது சரிந்து வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.

இதன்போது, வீட்டில் யாரும் இல்லாததன் காரணமாக உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனினும், வீட்டு பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதோடு, சமையலறை மற்றும் படுக்கையறை முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

மண்சரிவு அபாயங்கள்

பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்ககைகள்  எடுக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கான நிவாரண உதவிகளை பெற்றுக் கொடுக்கவும் திம்புள்ள பத்தனை கிராம அதிகாரியூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

தற்போது மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளாக தெரிவித்த திம்புள்ள பத்தனை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீரற்ற காலநிலையால் மண்சரிவு அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதனால் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுதியுள்ளனர்.

Share