கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் சுந்தர் பிச்சை. இவர் ஜூன் 10,1972ஆம் ஆண்டு பிறந்தார். இன்றோடு இவருக்கு 51 வயதாகிறது.
மதுரையில் பிறந்த இவர், தனது வாழ்க்கையை இரண்டு ஊர்களில் கழித்துள்ளார். ஒன்று அமெரிக்காவின் லொஸ் ஆல்டோஸ். இன்னொன்று சென்னை.
சுந்தர் பிச்சை அவர்களின் தந்தை சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு அவரது சொந்த சம்பாத்தியத்தில வாங்கிய முதல் வீட்டை அண்மையில் விற்பனை செய்தது நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது.
இவர் பிறந்து வளர்ந்த சென்னை வீடானது, அதிகப்படியான சென்டிமென்ட் வேல்யூ உள்ளது எனினும் அது அவரால் பெரிய விடயமாக பார்க்கப்படவில்லை. ஆனால், இவர் அமெரிக்காவில் லொஸ் ஆல்டோஸ் மலையில் தனது வீட்டை பார்த்து பார்த்து பிரம்மாண்டமாக கட்டியுள்ளார்.
இவரது வீடு எவ்வளவு பெரியது எனப் பார்த்தால், இந்தியாவில் மிகவும் பெறுமதியான வீடு என்றால் முகேஷ்அம்பானியின்ஆன்ட்லியா வீடுதான். இது 400000சதுர அடியில் அமைந்துள்ளது. அதாவது 10 ஏக்கருக்கு சற்று குறைவு.
ஆனால், சுந்தர் பிச்சையின் லொஸ் ஆல்டெஸ் மலை உச்சியில் அமைந்துள்ள வீடானது, 31.17 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
40 மில்லியன் டொலருக்கு வாங்கிய இந்த வீட்டுக்கு, இன்டீரியர் டிசைனிங் செய்வதற்காக மட்டுமே சுமார் 49 கோடி ரூபாய் செலவழித்துள்ளார்.
இந்த வீட்டில் இன்பினிட்டி ஸ்விம்மிங் பூல், வைன் செல்லாவர், சோலார் பேனல், ஜிம், ஸ்பா, லிப்ட் போன்ற வசதிகள் உள்ளன. அதுமட்டுமின்றி சுந்தர் பிச்சையின் வீட்டின் செக்யூரிக்கு மட்டுமே சுமார் 5 மில்லியன் டொலரை கூகுள் நிர்வாகம் செலவழித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.