சுவிட்சர்லாந்தில் செவிலியர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக சுவிஸ் செவிலியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
செவிலியர் தினத்தில் வெளியான எச்சரிக்கை
நேற்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், சுவிட்சர்லாந்தில் நிலவும் செவிலியர் தட்டுப்பாடு குறித்து செவிலியர் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
2029 வாக்கில், மத்திய சுவிட்சர்லாந்துக்கு மட்டுமே கூடுதலாக 14,000 செவிலியர்கள் தேவைப்படுவார்கள் என சுவிஸ் ஊடகமான SRF தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது