கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் கங்குவா. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் கதாநாயகை திஷா பாட்டனி. மேலும் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.
இந்நிலையில், ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த இப்படத்தின் டீசர் கிலிம்ப்ஸ் குறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதன்படி, இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வருகிற ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.
இதனால் சூர்யாவின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் கங்குவா கிலிம்ப்ஸ் வீடியோ எப்படி இருக்க போகிறது என்று.