25 September, 2023

சூர்யா43 ஹீரோயின், 10 வருடம் கழித்து தமிழ் சினிமாவுக்கு வரும் நடிகை

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்தபிறகு அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

 

 

சூர்யா 43 என அழைக்கப்ட்டு வரும் அந்த படத்தில் துல்கர் சல்மானும் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் படம் பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் சுதா கொங்கரா இதுவரை வெளியிடவில்லை.

சூர்யா 43 படத்தில் ஹீரோயினாக நஸ்ரியா நடிக்க போவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

நஸ்ரியா கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.