சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள சொகுசு கப்பல் இன்று (08.06.2023) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
சொகுசு கப்பல் (Cordelia Cruise) தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டு நேற்று (07.06.2023) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது
குறித்த சொகுசு கப்பல் இன்று திருகோணமலையை சென்றடைந்துள்ள நிலையில் பயணிகள் திருகோணமலையிலுள்ள சுற்றுலா தளங்களை பார்வையிட்டனர்.
அத்துடன் குறித்த கப்பலில் வந்துள்ள 744 பயணிகளும் சீகிரியா, தம்புள்ளை ஆகிய சுற்றுலாத் தலங்களை பார்வையிட அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.