23 September, 2023

ஜெயிலர் பிரம்மாண்ட வசூல் சூப்பர்ஸ்டாருக்கு செக் கொடுத்த சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்.

சமீபத்தில் ரிலீஸ் ஆன ஜெயிலர் படம் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. தியேட்டர்களில் ரசிகர்கள் படத்தை கொண்டாடிய நிலையில் 550 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் குவிந்து இருக்கிறது.

இதை சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அதிகாரபூர்வமாக அறிவித்து வருகிறது. மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினியை ரெக்கார்ட் மேக்கர் எனவும் தயாரிப்பு நிறுவனம் கூறி வருகிறது.

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு தயாரிப்பு நிறுவனம் செக் கொடுத்து இருக்கிறது.

கலாநிதி மாறன் ரஜினியை சந்தித்து செக் கொடுத்து இருக்கும் போட்டோ தற்போது வெளியாகி இருக்கிறது.