தமிழ் சினிமாவின் அழகு ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன் தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்த படம் அவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்று தான் கூற வேண்டும். அதன் பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன. ஆனால், படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
அதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இரண்டாவது முறையாக டான் என்ற திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இந்த திரைப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகமாக கவனிக்கப்படும் நடிகையாக இருக்கும் பிரியங்கா மோகன் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகின்றார்.
முன்னதாக தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் வாரிசு திரைப்படத்தில் இவர் தான் ஹீரோயினாக நடிக்க இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதால் கடைசி நேரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தார்.
தளபதிக்கு ஜோடி ஆன நடிகை ராஷ்மிகா வாரிசு படத்தின் பூஜையின்போது பண்ணிய அலப்பறைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த படம் இல்லை என்றால் என்ன.. அடுத்த படம் என்று நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க காத்துக் கொண்டிருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன்.
அனேகமாக நடிகர் விஜய்யின் அடுத்த படத்தில் இவர்தான் ஜோடியாக இருப்பார் என்று பலரும் கூறுகிறார்கள். என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவிடிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பின்போது டான் படத்தின் படப்பிடிப்பின்போது தனது மேலாடையை கழற்றி விட்டு ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.