23 September, 2023

டெஸ்லா முதலீடுகள் இந்தியாவில்: எலான் மஸ்க் உறுதி

கூடிய விரைவில் டெஸ்லா முதலீடுகள் இந்தியாவுக்குள் நுழையும் என எலான் மஸ்க் உறுதியளித்துள்ளார்.

நான்கு நாள் விஜயமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவருமான எலான் மஸ்க்கும் இடையில் இன்றையதினம்(21.06.2023) இடம்பெற்ற சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பின் பேசிய எலான் மஸ்க், ”நான் மோடியின் ரசிகன். இந்தியா மீது மோடி மிகவும் அக்கறைக்காட்டுகிறார்.

நான் மோடியின் ரசிகன்

ஏனென்றால் இந்தியாவில் முதலீடு செய்யும்படி மோடி எங்களை வலியுறுத்துகிறார். இந்திய சந்தைக்குள் டெஸ்லா கார்கள் கூடிய விரைவில் நுழையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதற்கு ஆதரவு அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி.

Share