ஹன்சிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தமிழில் தனுஷ் நடித்த ‘மாப்பிள்ளை’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனையடுத்து, ‘எங்கேயும் காதல்’, ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து, கடந்த ஆண்டு ஹன்சிகா தனது நண்பரான சொஹைல் கதூரியாவை காதல் திருமணம் செய்துக் கொண்டார்.
வதந்திக்கு பதிலடி
400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜெய்ப்பூர் அரண்மனையில் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. தற்போது, தமிழ், தெலுங்கு மொழிகளில் சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், ஹன்சிகா திரையுலகிற்கு வந்த புதிதில் பிரபல டோலிவுட் நடிகர் ஒருவர் தன்னுடன் அடிக்கடி டேட்டிங் வருமாறு அழைத்து டார்ச்சர் பண்ணியதாகவும், அவருக்கு தான் தக்க பாடம் புகட்டியதால், அதன்பின் அவர் தன் பக்கமே வருவதில்லை என அவர் பேட்டி ஒன்றில் கூறியதாக தகவல் பரவியது.
இதற்கு பதிலளித்துள்ள ஹன்சிகா, ‘நான் எந்த ஒரு பேட்டியிலும் இப்படி ஒரு கருத்தை சொல்லவில்லை. தயவுசெய்து கண்டதை எழுதுவதை நிறுத்துங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.