நடிகை கங்கனா எப்போதும் பல்வேறு விஷயங்களை வெளிப்படையாக பேசக்கூடியவர். தமிழ் சினிமாவில் தாம் தூம், தலைவி உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார் அவர்.
அடுத்து ராகவா லாரன்ஸ் உடன் சந்திரமுகி 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார் அவர். மேலும் ஹிந்தியில் சில முக்கிய படங்கள் கைவசம் வைத்து இருக்கிறார்.
தொல்லை செய்த நடிகர்
பாலிவுட்டில் இருக்கும் சில நடிகர்கள் பற்றி கங்கனா தொடந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். தன்னை ஒரு சூப்பர்ஸ்டார் நடிகர் டேட்டிங் வரும்படி கெஞ்சினார் என்றும், வீட்டுக்கு வந்து மோசமான சில விஷயங்களை செய்தார் என்றும் கூறி இருக்கிறார் கங்கனா.
நடிகர் ரன்பீர் கபூரை தான் மறைமுகமாக தாக்கி இருக்கிறார் கங்கனா. அவர் பல பெண்களுடன் இருப்பவர் என்றும், ஆலியா பட் உடன் அவர் செய்த திருமணம் போலி என்றும் கங்கனா குற்றம்சாட்டி இருக்கிறார்.