tamil cinema : தென் ஆப்பிரிக்காவில் காதலி தனது தந்தையை இழந்து அவரது இறுதிச் சடங்கின் போது தனது உறவினர்களுடன் சோகத்தில் அழுது கொண்டிருக்கும் போது காதலன் தனது காதலைக் கூறியுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த இடத்தில் தந்தையின் சடலத்தின் முன்பு உறவினர்கள், நண்பர்கள் என அமைதியாக அழுது கொண்டிருக்கின்றனர். திடீரென நபர் ஒருவர் அழுதுகொண்டிருந்த பெண்ணிடம் சென்று காதலைக் கூறியுள்ளார்.
குறித்த பெண் கண்ணீர் விட்டு அழுது சில நொடிகள் கழித்து அவருக்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில் தனது விரலை நீட்டி மோதிரத்தை வாங்கியுள்ளார்.

tamil cinema
அவர் இடத்தை அறிந்து காதலை வெளிப்படுத்தி இருக்கலாம் என்றும், அல்லது இறுதிச் சடங்கு அனைத்தும் முடிந்த பிறகாவது, தன்னுடைய காதலை சொல்லி இருக்கலாம் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
இன்னொரு பக்கம், உயிரிழந்த நபர் இருக்கும் போதே தன்னுடைய காதலை வீட்டாரிடம் தெரிவித்து, பின்னர் அவரின் சம்மதத்துடன் அந்த பெண்ணை இளைஞர் திருமணம் செய்ய நினைத்திருக்கலாம் என்றும், அதற்கு முன்பே அவர் இறந்து போனதால், அந்த சமயத்தில், இளம்பெண்ணுக்கு உறுதுணையாக இருப்பேன் என்ற கோணத்தில் கூட, அவர் அப்படி காதலை வெளிப்படுத்தி இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.