30 May, 2023

தற்போது வித்தியாசமான விவகாரமாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்பொழுது ட்ரைவர் ஜமுனா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவருடன் ஆடுகளம் நரேன், ஸ்ரீரஞ்சனி, stand-up காமடியன் அபிஷேக், ராஜாராணி பட புகழ் பாண்டியன், கவிதாபாரதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயனால் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த ட்ரெய்லர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு டாக்ஸியில் செல்லக்கூடிய ட்ரைவர் ஐஸ்வர்யா ராஜேஷ் அவருடைய வண்டியில் பயணம் செய்யக்கூடிய சில நபர்கள் அவர்களை சுற்றி நடக்க கூடிய அதுவும் ஒரே நாளில் நடக்கக்கூடிய இந்த கதையைதான் டிரைவர் ஜமுனா.

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எதிரி உள்ளது தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள இணையத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தற்போது வித்தியாசமான உதட்டுச் சாயம் பூசிக்கொண்டு விவகாரமாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்று என்ன கண்றாவி இது என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Share