தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் கேரக்டர் ஆர்டிஸ்டாக நடித்து வருபவர் சுரேகா வாணி. விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கூட இவர் நடித்திருந்தார். இவர், தமிழில் உத்தம புத்திரன், தெய்வத்திருமகள், ஜில்லா, பிரம்மா, எதிர் நீச்சல், மெர்சல், விஸ்வாசம், மாஸ்டர் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
சமீபத்தில் விஜய்யின் சிறந்த ஆக்ஷன் படங்களை எனக்கு தெரிவியுங்கள் என்று வலைத்தளத்தில் பதிவை வெளியிட்டு விஜய், அஜித் ரசிகர்கள் இடையே மோதலை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கினார். இதனையடுத்து, சுரேகா வாணி கணவர் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டார்.
இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது 43 வயதாகும் சுரேகா வாணி இரண்டாம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் இந்த திருமணத்துக்கு அவரது மகள் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.