கவுண்டமணி
நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போதும் கொண்டாடும் காமெடி நடிகர். அவர் பேசும் வசனங்கள் மற்றும் கவுன்டர்கள் தற்போதும் சமூக வலைத்தளங்களில் மீம்களாக வலம் வருகின்றன. குறிப்பாக கவுண்டமணி – செந்தில் கூட்டணியில் வந்த காமடி அளவுக்கு தமிழ் சினிமாவில் வேறு எந்த காமெடியும் அமையவில்லை என்றும் சொல்லலாம்.
கவுண்டமணி கடந்த பல வருடங்களாகவே சினிமாவில் நடிக்காமல் தான் இருக்கிறார். இருந்தாலும் அவர் சினிமா பற்றிய விஷயங்களை விரல் நுனியில் வைத்திருப்பாராம்.
எடிசன் போட்டோ
மேலும் அவர் சினிமாவை பெரிய அளவில் நேசிப்பதால் சினிமாவை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனின் புகைப்படத்தை ஆபிசில் வைத்திருப்பாராம், அதன் அருகில் பெருமாள் போட்டோவும் இருக்கும்.
தினமும் உள்ளே வரும் போது முதலில் எடிசன் போட்டோவை தொட்டு கும்பிட்டுவிட்டு அதன் பிறகு தான் கடவுள் போட்டோவை கும்பிடுவாராம் கவுண்டமணி.