நடிகை அபிராமி
நடிகை அபிராமி 2001ம் ஆண்டு வானவில் படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின் மிடில் கிளாஸ் மாதவன், சமுத்திரம், சார்லி சாப்ளின், விருமாண்டி என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.
பின் இவர் 2014ம் ஆண்டே சிறுவயது நண்பர் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் ஜோதியாக நடித்த 36 வயதினிலே படம் மூலம் ரீ-என்ட்ரீ கொடுத்தார்.
லேட்டஸ்ட் தகவல்
நடிகை அபிராமி அன்னையர் தின ஸ்பெஷலாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது 40 வயதாகும் அபிராமி மற்றும் அவரது கணவர் ராகுல் இருவரும் சேர்ந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார்களாம்.
கடந்த வருடம் மகளை தத்தெடுத்ததாகவும் அவருக்கு கல்கி என பெயர் வைத்துள்ளதாக பதிவு செய்துள்ளார். இதோ அவரது மகளின் புகைப்படம்,