25 September, 2023

திருமண முதல் நாளில் கண்ணீர் விட்ட நயன்தாரா! விக்னேஷ் சிவன் கொடுத்த சர்ப்ரைஸ்

விக்கி – நயன்

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்ட நிலையில் அதற்கு பிறகு பல பிரச்சனைகளை எதிர்கொண்டனர். குறிப்பாக இரட்டை குழந்தைகளை வாடகை தாய் மூலமாக பெற்றது சர்ச்சையானது.

இத்தனை சர்ச்சைகளை தாண்டி தற்போது முதல் திருமண நாளை விக்கி மற்றும் நயன்தாரா இருவரும் கொண்டாடி இருக்கின்றனர்.

கண்ணீர் விட்ட நயன்தாரா

நெருக்கமானவர்களை மட்டும் அழைத்து திருமண நாளை வீட்டில் கொண்டாடி இருக்கின்றனர். அப்போது விக்னேஷ் சிவனின் நண்பர் புல்லாங்குழல் வாசித்து இருக்கிறார்.

அதை நயன்தாரா அருகில் அமர்ந்து ரசித்துக்கொண்டிருந்த நயன்தாரா ஒரு நேரத்தில் கலங்கி அழ தொடங்கி விடுகிறார்.

Share