25 September, 2023

தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகிய யுவதி.

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த விரைவு ரயிலில் மோதி நேற்றைய தினம் (19.08.2023) ஹட்டன் -கொட்டக்கலை பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் திம்புல பத்தனை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய உயிரிழந்த யுவதி, ஹட்டன்- கொட்டகலை நகருக்கு சென்று கையடக்கத் தொலைபேசியில் பேசியவாறு வீடு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டனுக்கும் கொட்டகலை புகையிரத நிலையங்களுக்குமிடையிலான 60 அடி பாலத்திற்கு அருகில் இடவ் விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் திம்புல பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.